கோவிந்தா முழக்கத்துடன் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர். அக்டோபர் 02, திருச்சி கே.கே.நகர் இந்திரா நகர் அலமேலு மங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 25ம் ஆண்டாக இந்த வருடம் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா கடந்த 18ந்தேதி கொடி யேற்ற த்துடன் துவங்கியது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு அபிஷேக பெருமாள் பல்வேறு ஆராதனைகளும், ஸ்ரீனிவாச வாகனங்களில் சிறப்பு வீதி உலாவும் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் விமர்சையாக நடத்தப்படும் திருத்தேர் விழா 23-ம் ஆண்டாக இன்று காலைநடைபெற்றது.
காலை 8.30 மணி அளவில் ஸ்ரீனிவாசபெருமாள் அலமேலு மங்கை உடன் திருத்தேரில்
எழுந்தருளினார். சரியாக 8.45 மணிக்கு பக்தர்களின் “கோவிந்தா கோவிந்தா” என்ற முழக்கத்துடன் திருத்தேரானது. வடம் பிடித்து இழுக்கும் வைபவம் நடைபெற்றது. இந்த திருத்தேர் ஆனது கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு நான்கு மாட வீதிகளிலும் சுற்றி வந்து சுமார் 11.30 மணி அளவில் தேரோட்டம் நிறைவுபெற்றது.
இதனை தொடர்ந்து பெருமாள் அலமேலு தேர் நிலைக்கு வந்தவுடன் தரிசன மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சுமார் 12 மணி அளவில் இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம்வழங்கப்பட்டது. இதில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இதில் முக்கிய பிரமுகர்க ளாக பலர் கலந்து கொண்டனர். மாமன்ற உறுப்பினர்கள் பொற்கொடி, மலர்விழி ராஜேந்திரன், தி.மு.க. கலைஞர் நகர் பகுதி செயலாளர் மணிவேல். 63வது வட்ட தி.மு.க. செயலாளர் மூர்த்தி, 64வது வட்ட தி.மு.க. செயலாளர் ஆனந்த், அ.ம.மு.க. மாநகர அவை தலைவர் சாத்தனூர் ராமலிங்கம், அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற இளைஞர் அணி துணை செயலாளர் கந்தசாமி. 63வது வார்டு அ.தி.மு.க. வட்ட செயலாளர் சதீஸ்குமார் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.
இந்த அரசியல் பிரமுகர்களும் விழாவில் ஸ்ரீ காளிதாஸ் குழுவினரின் நாதஸ்வர இசையும் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments