திருச்சி கே.ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ப்ராஜெக்ட் எக்ஸிபிஷன் 21
திருச்சி சமயபுரம் கே.ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் தகவல் தொடர்பியல் துறை சார்பாக ப்ராஜெக்ட் எக்ஸிபிஷன் 21 என்ற பெயரில் நடைபெற்றது. இக்கல்லூரியின் முதல்வர் D.சீனிவாசன் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
இதில் 300க்கும் மேற்பட்ட மின்னணுவியல் தகவல் தொடர்பியல் துறை சார்ந்த மாணவர்கள் தங்களின் புதிய படைப்புகளை ப்ராஜெக்ட் ஆக மாற்றி காட்சிப்படுத்தி அனைவரையும் வியக்க வைத்துள்ளனர். மாணவர்கள் பேரளவு ஒருங்கிணைத்து சுற்று (VlSI), இணைய உலகம் (IOT) பதிகணினியியல் (Embedded) செயற்கை நுண்ணறிவு (AI) எண்ணிக்கை குறிகை செயற்பாடு (DSP processing) மற்றும் அலைக்கம்பம் (ANTENNA)துறையில் வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களை காட்டி அதன் செயல் முறைகளை விளக்கினர். இந்நிகழ்ச்சிக்கு பி.ஐயப்பன் JTO Rural BSNL மற்றும் ஸ்ரீதர் JTO commercial BSNL சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாணவர்கள் படைப்புகளை பார்வையிட்டு சிறந்த படைப்புகளுக்கு பரிசளித்தனர்.
மின்னணுவியல் தகவல் தொடர்பியல் துறை தலைவர் முனைவர் மகேஸ்வரி தலைமையில் உதவி பேராசிரியர்கள் பாலமுருகன், சையது உசேன் மற்றும் விக்னேஸ்வரன் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்வை பல்வேறு துறையை சேர்ந்த மாணவர்களும் பேராசிரியர்களும் கண்டுகளித்து எதிர்காலத்துக்கு உகந்ததாக இருக்கிறது என்று பாராட்டினர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU