Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

சிறந்த தன்னாட்சிக் கல்லூரிகளின் பட்டியலில் திருச்சி காவேரி பெண்கள் சுயநிதி கல்லூரி

சிறந்த தன்னாட்சிக் கல்லூரிகளின் பட்டியலில் (education world 21) தேசிய அளவில் 77 வது இடத்தையும், மாநில அளவில் 21 வது இடத்தையும் பிடித்துள்ளது திருச்சி காவேரி சுயநிதி பெண்கள் கல்லூரி. இதனைக் குறித்து கல்லூரியின் முதல்வர் சுஜாதா கூறுகையில்… சிறந்த கல்லூரிகளில் குறிப்பாக இந்திய அளவில் 100 இடங்களுக்குள் இடம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதில் ஒரு வெற்றியாகவே இதனை பார்க்கிறோம் NAAC மற்றும் NIRF  மதிப்பீட்டில் குறிப்பாக தன்னாட்சிக் கல்லூரிகளிலும் சுயநிதி கல்லூரிகளுக்கு அதிக அளவு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை.

ஆனால் எங்கள் கல்லூரி கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த கல்லூரிகளின் வரிசையில் எங்களுடைய கல்லூரிக்கான மதிப்பீட்டு அறிக்கையை அளித்து வருகிறோம்.  சிறந்த கல்லூரியை உருவாக்குவதற்கு நாங்கள் அதிகமாக கவனம் செலுத்துவது ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதிலும் கல்லூரி பாடத்திட்டங்களில் தான். எங்கள் பாடத் திட்டங்களை வகுப்பதற்காக சிறந்த கல்வியாளர்களை கொண்ட குழு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இக்குழுவில் உள்ள உறுப்பினர்கள் சென்னை, டெல்லி, திருவனந்தபுரம் போன்ற இடங்களிலும் இருந்து எங்களுடைய கல்வி குழுவோடு இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்தபடியாக ஆசிரியர்கள் தேர்ந்தெடுப்பதில்லதற்போது நாங்கள் டாக்டர்  பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து வருகிறோம். மேலும் 98 பேர் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் நெட் போன்ற தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது. சிறந்த முறையில் கல்வி அளிப்பதற்கான அனைத்து தேவைகளையும் கல்வி நிறுவனம் தீவிர ஆலோசனைக்குப் பிறகு செயல்படுத்தி வருகின்றனர். மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதில் எங்கள் கல்லூரி மிக முக்கியமான பங்கை அளித்து வருகிறது. அவர்களுக்கு பிளேஸ்மெண்ட் முறையில் வேலை கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு சிறந்த தன்னாட்சி கல்லூரிகளில் குறிப்பாக திருச்சி பொருத்த வரையில் மகளிர்  சுயநிதி கல்லூரிகளில் எங்கள் கல்லூரி மட்டுமே இடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் நிர்ணயித்துள்ள நெறிமுறைகளை  பின்பற்றும் கல்லூரிகளில் வரிசையில் எங்கள் கல்லூரி சிறந்து விளங்குவது. மேலும் இன்னும் சிறப்பாகச் செயல்படுவதற்கான உத்வேகத்தையும் அளித்துள்ளது. மிக முக்கியமாக மதிப்பிடப்படும் பிரிவுகள் கல்லூரி வளாகத்தின் அமைப்பு, ஆசிரியர்களின் தரம், கற்பித்தல் முறை, பாடப்பிரிவுகள், மாணவர்களின் பங்களிப்பு, விளையாட்டு மற்றும் கல்வி, கல்லூரியில் மாணவர்களின் செயல்பாடுகள், வேலை வாய்ப்பில் கல்லூரியின் சிறப்பு மற்றும் பொதுமக்களிடம் கல்லூரிக்கு இருக்கும் மதிப்பு இவற்றின் அடிப்படையில் கொடுக்கப்படும் மதிப்பெண்கள் மூலம் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.

தன்னாட்சிக் கல்லூரிகளில் சிறந்த கல்வி தரத்தை வழங்குவதில் எங்கள் கல்வி குழுமம் எப்பொழுதும் முன்னோடியாக செயல்பட்டு வருகின்றனர். மாணவர்களின் தேர்வு முறை தேர்ச்சி விகிதம் இவை அனைத்தும் எங்களுடைய இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.   எங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான அனைத்து முயற்சிகளிலும் கல்வி நிறுவனம் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவருமே இணைந்து பணியாற்றிக் கொண்டு இருப்பதால் வரும் ஆண்டுகளில் இன்னும் தமிழகத்தின் சிறந்த கல்லூரிகளின் வரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் பெருகும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்கிறார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *