தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில்  தங்கம் வென்ற திருச்சி சிறுவன்

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில்  தங்கம் வென்ற திருச்சி சிறுவன்

திருச்சி ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் ரித்திக் கணேஷ் தேசிய அளவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளார்,

திருச்சியில் வசிக்கும் சங்கீதா சுரேஷ் அவர்களின் மகனான ரித்திக்கணேஷ் 
ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். நான்கு வயது முதல் ஸ்கேட்டிங்கில் ஆர்வம் வந்ததால் ரித்திக்கின் பெற்றோர்களும்  பயிற்சிவகுப்புகளில் சேர்த்து பயிற்சியளித்து உள்ளனர்.


 ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா பள்ளியில்  ஸ்கேட்டிங் மாணவர்களுக்கும் பிரத்யேகமாக  பயிற்சி அளித்துள்ளனர்.
 கடந்த ஏப்ரல் மாதம் சண்டிகரில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில்  தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று மாணவர்கள்    கலந்து கொண்டுள்ளனர்.
 திருச்சியை சேர்ந்த ரித்திக்  தங்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
 கிட்டத்தட்ட 21 மாநிலங்களில் இருந்து மாணவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 
இதுகுறித்து ரித்திக்கிடம்  கேட்டபோது  எனக்கு   ஸ்கேட்டிங் என்றால் ரொம்ப  பிடிக்கும் என்  அம்மா அப்பா இருவருமே எனக்கு அதை விளையாடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தனர் எப்பொழுதுமே எனக்கு ஸ்கேட்டிங் செய்யும்பொழுதெல்லாம் இந்த உலகத்தில் பறப்பது போன்ற உணர்வே தோன்றும் அதனால் எனக்கு அதனை ஆழமாக கற்றுக் கொள்ள விரும்பி தொடர்ந்து பயிற்சி எடுத்துக்கொண்டேன்.
  தேசிய அளவில் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

 வெற்றியைக் குறித்து  ரித்திக்கின் அம்மா    சங்கீதா கூறுகையில்,

 விளையாட்டில்  இவனுடைய ஆர்வத்தை நாங்கள் புரிந்து கொண்டது போலவே பள்ளியும் புரிந்துகொண்டது அதுமட்டுமின்றி விக்னேஷ் வித்யாலயா பள்ளியில் ஸ்கேட்டிங் பயிற்சி ரிங்  அமைத்துள்ளனர்.
 திருச்சியை பொருத்தவரை வேறு எங்கும் ரிங் கொண்டு பயிற்சி அளிப்பது இல்லை சாலைகளிலேயே இந்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது ஆனால்   இந்த பள்ளியில் ரிங்  பயிற்சி செய்ததன்மூலம் இன்று தேசிய அளவில்  எங்களுக்கும், பள்ளிக்கும்,தமிழ்நாட்டிற்கும்   பெருமை சேர்த்துள்ளான் என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF