ஏழை குழந்தைகளுக்கு உதவும் திருச்சி லேடிஸ் சர்க்கிள் சமுக அமைப்பு

ஏழை குழந்தைகளுக்கு உதவும் திருச்சி லேடிஸ் சர்க்கிள் சமுக அமைப்பு

இல்லாதவர்களுக்கு உதவி செய்வது தான் எத்தனை ஆனந்தம்.

 இவ்வுலகில் இல்லாதவர்களை அரவணைக்க ஓராயிரம் கரங்கள் ஒன்று கூடிக் கொண்டுதான் இருக்கின்றன LADIES  CIRCLE INDIA சமுக அமைப்பின் ஒரு பகுதியான TRICHY LADIES CIRCLE NO. 33 திருச்சியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்த வண்ணமே இருக்கின்றனர் ,TRICHY LADIES CIRCLE 33மற்றும் TRICHY ROUND TABLE 54 இணைந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தேவையான நோட்டுப் புத்தகங்கள், அவர்கள் வகுப்பறைக்கு தேவையான உபகரணங்கள் ,வகுப்பறை சீரமைத்தல், பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை போன்றவற்றையும் வழங்கி வருகிறது.


 அதுமட்டுமின்றி TRICHY LADIES CIRCLE பெண்களுக்குப் தனித்துவமாக  உதவி செய்து வருகின்றனர் அவர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான உதவிகளையும் ,தையல் மெஷின் போன்ற உபகரணங்கள் வழங்கியும் அவர்களது வாழ்வியல் முன்னேற்றத்துக்கு உதவி வருகின்றனர். 
ஆதரவற்ற குழந்தைகளுக்கு தேவையானவற்றை  முகாம்களுக்கு சென்றும் ,
ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்றும்  அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கியும் வருகின்றனர்.


 அமைப்பைச் சேர்ந்த டாக்டர் ஸ்வர்ணா  நம்மோடு பகிர்ந்து கொள்கையில் ,
இல்லாதவர்களுக்கு உதவுவதில் இவ்அமைப்பில் மிகுந்த ஆர்வம்  செலுத்தி வருகிறது குறிப்பாக பெண்கள் குழந்தைகளின் நலனில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் அல்லது இரு வாரங்களுக்கு ஒருமுறை எங்களால் முடிந்த உதவிகளை ஆதரவற்ற இல்லங்களுக்கு சென்று உதவுவதும் இல்லாத குழந்தைகளுக்கு உதவும் விதமாக எங்கள் பணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.


 அதில் இம்மாதத்தில் நட்பு சிறார் இல்ல  பிள்ளைகள், வாய்ஸ் அறக்கட்டளை சிறுகனூரில் சென்று அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் பழங்கள் போன்றவற்றை வழங்கி வந்துள்ளோம். நாங்கள் அளிப்பது மட்டுமின்றி அவர்களுக்கு என்ன தேவை என்று முன்கூட்டியே கேட்டு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறுகிறார் .கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இச்சேவை தொடர்ந்து  கொண்டிருக்கிறது.இதன் சிறப்பம்சமாக திருவெறும்பூரில் சமூக நலக்கூடம் என்ற ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறோம் அதில் குவார்யில் உள்ள குழந்தைகளை பாதுகாப்பதற்காக Day care cemter டே கேர் சென்டர் ஆக செயல்படும் ஆனால் இந்தகொரானா  காலகட்டத்தில் மூடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu