திருச்சி மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதியாக மணிவாசகன் என்பவர் பணியாற்றி வருகிறார். அவரிடம் பல்வேறு குடும்ப நல வழக்குகள், ஆண்களால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் இவை குறித்த வழக்குகள் விசாரணைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அதை அவர் முறையாக விசாரணை செய்யாமல் எல்லா வழக்குகளிலும் பெண்களுக்கு எதிராகவே தீர்ப்பு வழங்குவதாகவும், தொடர்ந்து அவரிடம் வரும் வழக்குகளில் பெண்களுக்கு எதிராகவும், ஆண்களுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறார். ஏற்கனவே அவர் மீது புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில் அவரை
பணியிடை நீக்கம் செய்யாமல் விசாரணை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி அந்த நீதிபதியை கண்டித்தும், உடனடியாக அவரை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தியும் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO







Comments