ஆணவக்கொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற ஒன்றிய அரசையும், தமிழக அரசையும் வலியுறுத்தி கடந்த 9ம் தேதி சென்னையில் எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான, எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் ஆணைக்கிணங்க
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர்கள்
புல்லட்லாரன்ஸ், கனியமுதன், சக்தி ஆற்றலரசு, வழக்கறிஞர் கலைச்செல்வன், குருஅன்புச்செல்வன் ஆகியோர் தலைமையில்
நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மேலிடபொறுப்பாளர் குடந்தை.தமிழினி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஆவண கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷ்டமிட்டனர்.
இதில் திருச்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments