உலக நாடுகளில் பென்டகன், புஜ் கலிப்பா, இந்தியாவில் முக்கிய பகுதிகள் ஹைதராபாத் விமான நிலையம் உள்ளிட்டவைகளுக்கு கொடுக்கப்பட இயற்கை பாதிப்பு ஏற்படுத்தாமல் நீர் மின்சாரம் ஆகியவற்றை சேமித்து பெற்றுள்ள உயரிய பசுமை சான்றிதழை திருச்சி மா காவேரிக்கும் GBCI வழங்கி பெருமைப்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் இந்த பசுமை சான்றிதழை பெற்றிருந்தாலும் திருச்சி மா காவேரி Green Business Certification Inc. – GBCI) நிறுவனம்
பசுமை சான்றிதழ் வழங்கி உள்ளது.
GBCIயின் பசுமை சான்றிதழ் காவேரி மருத்துவமனை குழுமத்தின் திருச்சி மா காவேரிக்கு கிடைத்துள்ளது குறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குனர் செங்குட்டுவன் குறிப்பிடும் பொழுது மா காவேரி மருத்துவமனை நீர்வளம் மின்சாரத்தை சேமிக்கிறோம். இயற்கை வழியில் சோலார் மற்றும் காற்றாலை மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்து இயற்கையை பாதுகாக்கிறோம். நீரை வீணாக்காமல் மறுசுழற்சி செய்து அதன் மூலம் மருத்துவமனைக்கு தேவையான நீரை நாங்களே பயன்படுத்திக் கொள்கிறோம். இவைகளை முறையாக மா காவேரி மருத்துவமனை கடைப்பிடித்ததன் மூலமாக பசுமை கிடைத்துள்ளது. சான்றிதழ் மூலம் மா காவேரி தரத்திற்கும் மேலும் ஒரு படி உயர்ந்துள்ளது பெருமைபட வேண்டியது என தெரிவித்தார்.
பசுமை சான்றிதழை, GBCI தென்கிழக்கு ஆசியா மற்றும் நடுத்தர கிழக்கு சந்தைகளுக்கான மேலாளர் திரு. கோபால்கிருஷ்ணன் அவர்கள், காவேரி மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர். டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ் அவர்கள். காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர். D. செங்குட்டுவன், அவர்கள், ஆகியோர்களுக்கு வழங்கினார்.
இதன் மூலம், காவேரி மருத்துவமனை, மருத்துவத் துறையில் ஒரு சாதனைகளையும் விருதுகளையும் பெற்று தற்பொழுது இயற்கையை பாதுகாத்து மனித வளத்தை காக்க பசுமை சான்றிதழை
நேற்று சாதனை புரிந்துள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments