திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியத்தில் 100% எழுத்தறிவு இயக்கமானது நிறைவு பெற்றது. 20-07-2021 அன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் தொடங்கப்பட்டு, மணிகண்டம் ஒன்றிய ஆசிரியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்களால் நடத்தப்பட்டு 4057 பள்ளி செல்லா முதியோர்களுக்கு கையெழுத்து கற்பிக்கப்பட்டது.

அதற்கு சான்றாக அமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பப்பட்டுள்ளது 300க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் தோறும் இப்பணி நடைபெற்றுள்ளது. இன்னும் 1343 பேர் மாற்றுத்திறனாளிகள் கை பிடிக்க இயலாத மூத்தோர் உள்ளனர் அவர்கள் தவிர மணிகண்டம் ஒன்றியத்தில் கையெழுத்திட தெரியாத யாரும் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டு உள்ளது.
விரைவில் கல்வித்துறை அலுவலர்களும், அமைச்சர் ஆய்வு செய்து தமிழகத்தில் 100% எழுத்தறிவு பெற்ற மணிகண்டம் ஒன்றியம் என்பதை உறுதி செய்ய உள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn







Comments