திருச்சி எம்.பி. து
மறுமலர்ச்சி திமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான *திரு.துரை வைகோ* அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, *திருச்சி தெற்கு மாவட்ட மறுமலர்ச்சி திமுக”* சார்பில் இன்று காலை திருவெறும்பூர் – குண்டூர் “அன்பாலயம்” மனநலக் காப்பகத்தில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் அவர்கள் தலைமை வகித்து மனநலம் குன்றியவர்களுக்கு சிற்றுண்டி வழங்கினார்.இதனைத் தொடர்ந்து திருச்சி எம்.பி. துரை வைகோ அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரை நிகழ்த்தப்பட்டது.
இந்த நிகழ்வில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பீட்டர், மாவட்ட துணைச் செயலாளரும், தொலைத் தொடர்பு ஆலோசனைக் குழு உறுப்பினருமான புஷ்பா சுப்ரமணியன், திருவெறும்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் மு.திருமாவளவன், மாவட்ட இலக்கிய அணிச்செயலாளர் பெ.இராமநாதன், மாவட்ட இலக்கிய அணி
தலைவர் பெல் ச.மணிவண்ணன், மாவட்டப் பிரதிநிதிகள் வைரவேல், ஜெயபால், சரவண கணேசன், ஒன்றிய துணைச் செயலாளர் ராஜேந்திரன், எம்.எல்.எப். தொழிற்சங்க நிர்வாகி செல்லப்பா, கபாலி சுப்ரமணியன், குண்டூர் பாலமுத்து, பாரதிபுரம் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அன்பாலயம் முதியோர் காப்பகத்தின் மேலாளர் யுவன் சங்கர், திவ்யா ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments