திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன். இன்று (13.10.2021) காலை திருச்சி மாநகரத்திலுள்ள பல்வேறு இடங்களை பார்வையிட்டு வழங்கிய அறிவுரைகளின்படி பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் காணப்பட்ட நிழற்குடையுடன்கூடிய பேருந்து நிறுத்தகங்களை அடையாளம் கண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

அதன்பேரில், அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவின் எல்லைக்குட்பட்ட மன்னார்புரம் செல்லும் சாலையில் உள்ள டி.வி.எஸ் டோல்கேட் பேருந்து நிறுத்தத்தையும், புதுக்கோட்டை சாலையில் உள்ள ஜமால் முகமது கல்லூரி பேருந்து நிறுத்தத்தையும், போக்குவரத்து காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றியும், தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்தியும், தூசிகளை அகற்றும் கருவி கொண்டு சுத்தப்படுத்தியும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வந்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும், பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தும், போக்குவரத்து இடையூறு இல்லாமல் பொதுமக்கள் பயணிக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், தீபாவளி பண்டிகையை மகழ்ச்சிகரமாக பொதுமக்கள் கொண்டாடும் வகையிலும், எந்தவிதமான குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் உறுதி செய்து சிறப்பாக பணி செய்ய காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகளையும் திருச்சி மாநகர காவல் ஆணையர் வழங்கியுள்ளார்கள்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn






Comments