திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முத்தரசநல்லூர் பகுதிகளில் மழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது மாநகர மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறு குழந்தைகள் பயிலும் அரசு பள்ளியிலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இருக்கும் ரேஷன் கடைகளில் வெள்ள தண்ணீர் தேங்கியுள்ளது
இதில் பதிவு செய்யும் ரேஷன் கடை ஊழியர் மாற்றுத் திறனாளி என்பதால் அவருடைய வண்டி செல்லும் வழிப்பாதை தடங்கள் எல்லாம் மழைநீர் தேங்கி உள்ளதால் ரேஷன் ஊழியர்
அவருடைய மூன்று சக்கர வாகனத்தில் செல்லும்பொழுது வண்டி வெள்ள தண்ணீரில் மாட்டிக்கொண்டு மிகவும் அவதுக்குள்ளான நிலை ஏற்பட்டுள்ளது மேலும் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் யாரும் ரேஷன் கடைக்கு சென்றுவர மாற்று வழி இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர் சிறு குழந்தைகள் பயின்று வரும் பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதும் ரேஷன் கடை வளாகத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதும் தொற்று பரவும் அபாயம் உள்ளது என்பதால் சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகம் சட்டமன்ற உறுப்பினர் அரசு துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தொற்று பரவாமல் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments