திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூக சேவையாக தன் கட்டுப்பாட்டிற்குள் வரும் கல்லூரிகளில் உள்ள செஞ்சிலுவை சங்கம் சார்பாக புதிய 3 அடுக்கு முககவசம் சேகரித்து திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து விட முடிவு செய்யப்பட்டது.

இந்த சமூக சேவையில் திருச்சி தேசியக் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் இணைய முடிவெடுத்தது கல்லூரியின் சார்பாக 2000 அறுவை சிகிச்சை முக கவசம் பல்கலைக்கழக முனைவர் ஜி. கோபிநாத்திடம் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.சுந்தரராமன் வழங்கியுள்ளார்.

பல்கலைக்கழக இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர்
முனைவர் கே.வெற்றிவேல் மற்றும் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் பொறுப்பாளர்கள். முனைவர் ஏ.விஜயசங்கர் இருந்துள்ளனர். கல்லூரியின் செயலாளர் கே. ரகுகநாதன் இந்த பணியை சிறப்பாக செய்த கல்லூரி செயலாளர் முனைவர் ஏ .விஜய்சங்கர் அவர்களை வெகுவாக பாராட்டியுள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC







Comments