Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

டெல்லியில் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற திருச்சி தேசிய கல்லூரி மாணவி

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் கலந்து கொள்ள, திருச்சி  தேசிய   கல்லுாரி மாணவி  தேர்வாகினார்.டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க, பாரதிதாசன்  பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லுாரி மாணவர்களை தேர்வு செய்ய கடந்த அக்., மாதம் தேர்வு நடந்தது. 

அதில் உடல் வலிமை, உயரம், அணி வகுப்பு பயிற்சி, கலை நிகழ்ச்சி போன்ற தேர்வுகள் நடந்தன.பல்கலை அளவில்  தேர்வு செய்யப்பட்டதில். திருச்சி  மாவட்டத்தில் 
 தேசிய கல்லுாரியில் நாட்டு நலப்பணித் திட்டம் மாணவி   இளங்கலை இரண்டாம் ஆண்டு உடற்கல்வித்துறையில் பயிலும் பபிதா  தேர்வு செய்யப்பட்டார்.நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு இதில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. 

தெற்கு மண்டல அளவில் குடியரசு தின முந்தைய அணிவகுப்பு முகாம் பெங்களுரூவில் நடந்தது. இந்த முகாமானது 10 நாட்கள் நடைபெறும்.தமிழ்நாடு, பாண்டிச்சேரி,கேரளா,கர்நாடகா
 அந்தமான் நிக்கோபார் தீவுகள் சேர்ந்த பல்கலைக்கழகம் மாணவர்கள் பயிற்சிபெறுவர்.  முகாமில் கடைசி இரண்டு நாளில் டெல்லியிலிருந்து அலுவலர்கள் வந்து மாணவர்களை அணிவகுப்பிற்கு தேர்வு செய்வார்கள்.

 தேர்வு செய்யப்பட்டு மாணவர்களுக்கு டெல்லியில் பயிற்சி அளிக்கப்படும்.இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்களும் கலந்து கொண்டனர். இம்முகாமில் பாரதிதாசன்  பல்கலை அளவில் தேர்வான,  மாணவர்களும் கலந்து கொண்டனர். 
இதில் புதுவை மற்றும் தமிழகத்தில் இருந்து  டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள பபிதா  தேர்வுசெய்யப்பட்டுள்ளார்

 உடற்கல்வி துறையில் பயின்று வரும் பபிதா  கல்லூரியில் சிறந்த  விளையாட்டு வீராங்கனையாக செயல்பட்டு வருகிறார். அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கத் தோ்வாகியுள்ள மாணவிக்கு கல்லூரியின் செயலாளர் ரகுநாதன் காலமேகம், முதல்வர் சுந்தரராமன், துணை முதல்வரும், உடற்கல்வி துறை தலைவருமான பிரசன்ன பாலாஜி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *