திருச்சி தேசிய கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பேரணி
தி.குணநிலா
தேசிய கல்லூரி மாணவர்கள் சாலை பாதுகாப்பு மற்றும் தலைகவசம் அணிவதன் அவசியத்தை குறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றனர். சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி திருச்சி தேசிய கல்லூரி மாணவர்களும் தேசிய நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் இணைந்து இன்று ஒரு வாகன பேரணியை நடத்தினர். இந்த பேரணியை திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் வேதரத்தினம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்பேரணி குறித்து தேசிய கல்லூரியின் துணை முதல்வரிடம் கேட்ட போது...
இப்பேரணி அனைத்து வாகன பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதத்தில் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இதில் மாணவர்கள் அனைவரும் தலைக்கவசம் அணிந்து சாலை விதிகளை பின்பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி சென்றனர் .
இப்பேரணியியை தொடங்கி வைப்பதற்காக தேசிய கல்லூரியின் முதல்வர் ஆர் .சுந்தர்ராமன் கலந்துகொண்டார். பின்னர் இதில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாநகர காவல்துறை குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் வேதரத்தினம் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழாவை தொடங்கி வைத்து மாணவர்களிடையே பேசிய போது... சாலை பாதுகாப்பின் அவசியம் தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவத்தை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். சாலை விதி முறைகளை பின்பற்றினாலே நம் நாட்டில் பல்வேறு விபத்துக்களை தடுக்க இயலும் ,விபத்துக்கள் நடப்பதற்கு சாலை விதிகளை மீறுவதும் அவசர அவசரமாக பயணிப்பது காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பின்னர் மாணவர்கள் அனைவரும் சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றி நடக்கும் உறுதிமொழிகளை ஏற்கும் விதமாக கையெழுத்திட்டு பேரணியில் கலந்து கொண்டனர் . பேரணியின்போது மாணவர்கள் அனைவரும் சாலை பாதுகாப்பு விதிமுறை வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி தங்கள் வாகனத்தின் முன்பு கட்டிக்கொண்டு பேரணியில் பங்கேற்றனர்.
இளம் தலைமுறைகள் இதுபோன்ற மக்கள் விழிப்புணர்வு செயல்பாடுகளில் ஈடுபடுவதை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கல்லூரியின் துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி மனம் நெகிழ்ந்து கூறினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM