இந்திய தேர்தல் ஆணையம், 2026-தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பினை அறிவித்தனைத் தொடர்ந்து இன்று (15.03.2026) முதல் தேர்தல் நன்நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகிறது.
அதன் அடிப்படையில் நாளை (16.03.2026) நடைபெறவுள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மாதந்தோறும் நடைபெறும் விவாசயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேர்தல் நன்நடத்தை திரும்ப பெறும்வரை நடைபெறாது.

மேலும், பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போடும்படி தெரிவிக்கப்படுகிறது. கோரிக்கை தொடர்பாக உரிய விசாரனை மேற்கொள்ளப்பட்டு தேர்தல் நன்நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு தீர்வு காணப்படும்.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments