திமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் – தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை அவருடைய இல்லத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் துரைவைகோ சந்தித்தார்.

இதனை தொடர்ந்து திமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் – தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு சகோதரர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன், திருச்சி அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ள, தருமபுரம் ஆதீனம் மௌன மடம், திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் 27 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை, நேரில் சந்தித்த துரை வைகோ ஆசியையும், வாழ்த்துகளையும் பெற்றார்.

இந்நிகழ்வில், திமுக கிழக்கு மாநகரச் செயலாளர் மு.மதிவாணன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி பொறுப்பாளர் புதூர் மு.பூமிநாதன், கழக துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையா, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி இரா.சோமு, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments