திருச்சியில் கோரிக்கைகளை நிறைவேற்ற எருமையிடம் மனு கொடுத்து நூதன போராட்டம்!!

திருச்சியில் கோரிக்கைகளை நிறைவேற்ற எருமையிடம் மனு கொடுத்து நூதன போராட்டம்!!
முஸ்லீம் உரிமை பாதுகாப்புக் கழகம் சார்பில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே எருமையிடம் மனு கொடுத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு மத்திய அரசுக்கு தரவேண்டிய ஜிஎஸ்டி வரி நிலுவை தொகை 22,680 வழங்காததை கண்டித்தும், உடனடியாக வழங்க வேண்டும் எனவும் இந்தியா முழுவதும் முஸ்லிம்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு சட்டமன்ற நாடாளுமன்ற தொகுதிகளில் 15 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக்கோரியும், பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரியும், உறையூர் பாத்திமா நகர் நாடார் தெருவில் உடனடியாக பாதாள சாக்கடை திட்டத்தை சீர் செய்ய வலியுறுத்தியும், திருச்சி காந்தி மார்க்கெட் உடனடியாக திறக்க கோரியும் எருமையிடம் மனு கொடுத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.
                                                      Advertisement
இந்ந ஆர்பாட்டத்தில் முஸ்லீம் உரிமை பாதுகாப்புக் கழகம் மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ரபீக் ராஜா, மாநில அமைப்பு செயலாளர் முகமது அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.