திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை, திருட்டு, சட்ட விரோத செயல்கள், மற்றும் பொதுமக்களின் அமைதிக்கு அச்சுறுத்தும் வகையில் செயல்படும் சமூக விரோதிகள் மற்றும் ரவுடிகள் என 850-ற்கும் மேற்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளை காவல்துறையினர் நேரடியாக அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் மேற்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்கும் பொருட்டு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், அவர்களின் ஆலோசனையின் பேரில் திருச்சிராப்பள்ளி அண்ணா பல்கலைக்கழக கணிணி அறிவியல் துறையுடன் சேர்ந்து சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்கும் “கருடன்” எனும் புதிய மொபைல் செயலி உருவாக்கப்பட்டு, சுப்பிரமணியபுரம், காவல் திருமண மண்டபத்தில் இன்று (03.10.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.
மேற்படி நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், அவர்கள் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்கும் “கருடன்” மொபைல் செயலி உருவாக்கத்தில் பெரும் பங்காற்றிய அண்ணா பல்கலைக்கழக கணிணி அறிவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் மற்றும் இறுதியாண்டு மாணவர்களான அகில் அகமத், ஆசிப் நவ்ஹித், மோகன் ஆகியோரை வெகுவாக பாராட்டியதுடன், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு
இச்செயலியின் முக்கியத்துவம் குறித்தும், செயலியை பயன்படுத்துதல் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments