மாநில அளவில் நடைபெற்ற 50-வது வருட துப்பாக்கி சுடும் போட்டியானது சென்னை ரைபில் கிளப் சார்பாக கடந்த 06.09.2025-ஆம் தேதி துவங்கி சென்னை வேளச்சேரியில் நடத்தப்பட்டு வந்தது. இத்துப்பாக்கி சுடும் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் தமிழக அளவில் துப்பாக்கி சுடும் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பிஸ்டல் பிரிவில் பங்கு பெற்ற திருச்சிராப்பள்ளி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் பணி புரியும் பெண் தலைமை காவலர் திருமதி. சோபியா லாரன்ஸ் என்பவர் தனி நபருக்கான போட்டியில் கலந்து கொண்டு ஐந்து போட்டிகளில் தங்கப் பதக்கங்கள், குழு பிரிவில் பங்கேற்று ஒரு தங்கப்பதக்கம் என மொத்தம் ஆறு தங்கப் பதக்கங்கள் வென்றார்.
அதே போல் மணப்பாறை காவல் நிலையத்தில் பணி புரியும் தலைமை காவலர் திரு. தினேஷ் என்பவர் தனி நபருக்கான போட்டியில் பங்கு பெற்று ஒரு தங்கப்பதக்கம் வென்றார்.
2) மேற்படி, மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கு பெற்று தங்கப்பதக்கங்கள் வென்ற இரு காவலர்களின் திறமையினை பாராட்டி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்கள் இன்று (19.09.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் பாராட்டு சான்றிதழ் வழங்கி ஊக்குவித்தார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments