திருச்சி பொன்மலை பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரானா தொற்று எண்ணிக்கை
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்மலை மண்டலத்தில் மூன்று வாரங்களாக கொரானா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் பகிர்ந்துள்ள புள்ளிவிபரங்களின்படி திருச்சி நகரில் ஆகஸ்ட் மாதம் 1 முதல் 7-ஆம் தேதி வரை புதிய நோய் தொற்று ஏற்பட்டவர்கள் 151என்ற எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. அதற்கு முந்தைய இரண்டு வாரங்களில் புதிய நோய்த்தொற்று எண்ணிக்கை 175 (ஜூலை 25 முதல் 31 )மற்றும் 155 என்று திருச்சி புதிய எண்ணிக்கை குறைந்து.
பொன்மலைப்பகுதியில் நோய்த்தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது ஆகஸ்ட் 1 முதல் 7 வரை பொன்மலை மண்டலத்தில் மட்டுமே 70 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். முந்தைய வாரங்களில் 59 மற்றும் 39 ஆக இருந்தது. ஜூலை நடுப்பகுதியில் ஒப்பிடுகையில் தற்போது பொன்மலைப் பகுதியில் நோய் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. திருச்சியில் உள்ள 65 வார்டுகளில் 44 வார்டுகளில் குறைந்தது ஒருவருக்காவது நோய்த்தொற்று பதிவாகியுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கையில்.. பேருந்து போக்குவரத்து விமான போக்குவரத்து வசதி கொண்ட பகுதியாக பொன்மலை தொகுதி விளங்குகிறது.
இங்குள்ள பொதுமக்கள் மற்ற மாவட்டங்களுக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது அதிகரித்து வருவதற்கு ஏற்ப தொற்று எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
கே.கே நகர், ராஜாராம் சாலை ஓலையூர் சாலை 38 வார்டில் 23 ஆக கடந்த வாரத்தில் பதிவாகி உள்ளது .ஏர்போர்ட் பகுதியில் மட்டுமேதொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆக பதிவாகி உள்ளது என்றார். தொற்று அதிகரித்து வரும் நிலையில் இப்பகுதியில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் சார்பிலும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn