திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் A.R.பொன்பெரியசாமி, கல்லூரிக்குழுத்தலைவர் Er. பொன்.பாலசுப்ரமணியன், விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் மு.பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
மு.பிரபு அவர்கள் கூறுகையில்… “அரசு விளையாட்டுத்துறை மாணவர்களுக்கு பல சலுகைகளை வழங்குகிறது அதைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். என் வாழ்க்கை சிறக்க என்னுடைய விளையாட்டு ஒன்றே காரணம்” என்றார்.
மேலும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசுப்பொருட்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. உடற்கல்வி இயக்குநர் சகாயலதாராணி ஆண்டறிக்கையும், விஜிசாரல் எலிசபெத் நன்றியுரையும் உடற்கல்வி உதவி இயக்குநர் செந்தில்குமார் விழாவினை ஒருங்கிணைப்பும் செய்தனர்.
இந்தாண்டு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை இயற்பியல் துறை வென்றது.
திருச்சியின் செய்திகள் அனைத்தும் உடனுக்குடன் உங்கள் வாட்ஸ்அப் குழுவில் மூலம் வந்தடைய கீழ்காணும் TRICHY VISION குழுவில் இணைய உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.மேலும் நீங்கள் பார்க்கும் நிகழ்வுகள், செய்திகள் , உங்கள் பகுதியின் செய்திகள்,கட்டுரைகள்,தனிதிறமைகள்,வேலை வாய்ப்புகள் அனைத்தும் எங்களிடம் அனுப்புங்கள் அதை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம்.
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
Comments