திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், இருங்களூரில் உள்ள திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பட்டமளிப்பு விழா எஸ்.ஆர்.எம் சென்னை ராமாபுரம் மற்றும் திருச்சி வளாகத்தின் தலைவர் டாக்டர் ஆர்.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கே.நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து 15 மாணவர்களுக்கு சிறப்பு விருதும், முதுகலையில் 32 பேருக்கும், இளங்கலையில் 144 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் எஸ்.ஆர்.எம் சென்னை ராமாபுரம் & திருச்சி வளாக துணை தலைவர் எஸ்.நிரஞ்சன், தலைமை இயக்குநர் டாக்டர் சேதுராமன், திருச்சி வளாக இயக்குநர் டாக்டர் என்.மால் முருகன், துணை இயக்குநர் டாக்டர் என். பாலசுப்ரமணியன், திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையம் டீன் டாக்டர் எஸ்.ரேவதி மற்றும் துறைத் தலைவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments