சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு திருச்சியில் மரக்கன்றுகள் நடும் விழா!

சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு திருச்சியில் மரக்கன்றுகள் நடும் விழா!

திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்க சார்பில் இன்று சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு குண்டூர்,மாத்தூர் பகுதிகளில் மரக்கன்றுகள் நடுவிழா நடைப்பெற்றது.

மக்கள் சக்தி இயக்க மாநில ஆலேசாகர் கே.சி. நீலமேகம் தலைமையில் மக்கள் சக்தி இயக்க மகளிர் அணி செயலாளர் குண்டூர் லலிதா, தண்ணீர் அமைப்பின் துணை செயலாளர் கி.சதீஸ்குமார், நிர்வாகி ஆர்.கே.ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது.

பூமியில் வாழும் மனிதன் உட்பட உயிரினங்களுக்கு நன்மை செய்யும் ஓசோன் படலத்தின் அடர்த்தி குறையாமல் தடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.

Advertisement


அரச மரம், மூங்கில், துளசிச் செடி போன்றவை அதிகமாகக் கரியமிலவாயுவை எடுத்துக் கொண்டு ஆக்சிஜனை கொடுக்கிறது. இதனை முன்னிட்டு பொன்மலை பகுதியில் துளசி விதைபந்து (100) கொடுத்தனர்.

https://youtu.be/KHZ3W-BpWV0
Advertisement

இதில் மக்கள் சக்தி இயக்க நண்பர்கள் நீ.வெங்கடேஷ், லோகேஷ், நீ.தயானந்த், ஏ. சரண்பாரதி, டி.அழகு கார்த்தி மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.