கொரோனாவால்  வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேடிச்சென்று உணவளித்து உதவும் பள்ளி மாணவி

கொரோனாவால்  வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேடிச்சென்று உணவளித்து உதவும் பள்ளி மாணவி

கொரோனாவால்  வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேடிச்சென்று உணவளித்து உதவும் பள்ளி மாணவி:கொரானா  தொற்றால்  பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு தேடிச்சென்று ஆரோக்கியமான உணவு அளித்து  உதவி வருகிறார்.

ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பிரத்தியா பாலமுருகன் இது குறித்த மாணவியிடம் கேட்டபோது ....எங்க வீட்டு அருகில் தான் என் உறவினர் வீடுள்ளது  என் உறவினர் வீட்டில்  ஒருவருக்கு தொற்று  உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து  வீட்டிலிருந்த  அனைவருமே தனிமைப்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களுக்கு தேவையான வீட்டு உணவு ஆரோக்கியமான உணவுகளை சமைத்து சாப்பிடுவதற்கு இயலாத நிலை ஏற்பட்டபோது நாங்கள் அவர்களுக்கு உதவி வந்தோம். அப்போதுதான் தோன்றியது இது போன்று தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் ஆரோக்கியமான உணவு இல்லாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நம்மால் முடிந்த ஏதேனும் ஒன்று செய்ய வேண்டும் என்று வீட்டிலேயே உணவினைத் தயார் செய்து உணவு தேவைப்படுபவர்களை தேடி சென்று உணவு அளித்து வருகிறேன்.

எப்போதுமே ஒரு கை ஓசை தராது அல்லவா ,அப்படித்தான் என்னோடு இணைந்து என் நண்பர்களும் இணைந்து  ஒரு குழுவாக (Bettertogether) என்ற பெயரில் செயல்படுகிறோம்.
 சென்னை போன்ற நகரங்களில் இதுபோன்ற மாணவர்கள் ஒரு குழுவாக இணைந்து உதவி செய்து வருகின்றனர் திருச்சியில் அது போன்ற எவ்வித குழுக்களும் இல்லை ஏன் யாரோ செய்ய வேண்டும் நாமே செய்தால் என்ன என்று சிந்தித்த போதுதான் திருச்சி பெட்டர் டு கெதர் என்ற குழுவை உருவாக்கியுள்ளோம்.

எல்லாரும் உணவுதான் அளிப்பார்கள் ஆனால் உணவு எப்படி இருந்தது உணவில் என்ன சுவை இருக்கிறது என்பது அவர்களுக்கு முதலில் தெரியாது. இருந்தாலும் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வாசகங்களும் மேலும் சுவை தெரிந்தவுடன் அதில் காரம் உப்பு உள்ளிட்டவை அதிகமாக இருந்ததற்கு மன்னிக்கவும் உள்ளிட்ட வாசகங்களுடன் அந்த உணவுகள் இந்த மாணவர்களால் கொடுக்கப்படுகிறது.

 இந்த குழுவில் இரண்டு விதமாக  எங்களுடைய வேலைகளை பிரித்து  உணவு சமைத்து  தயார் செய்வது அதனை  தேவைப்படுபவர்களுக்கு கொண்டுசென்று கொடுத்து வருவது  என்று எங்கள் வேலைகளை நாங்களே பிடித்து வைத்துள்ளோம். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள் தான்,  என் தந்தையின் ஒத்துழைப்பின்றி இதனை என்னால் செய்ய இயலாது அவர்கள் தரும் ஊக்கமும், செய்யும் எந்த ஒரு செயலுக்கும் அஎன்  உடன் நிற்கின்றனர். 


இப்போதுவரை எங்களுக்கு தெரிந்தவர்கள் அருகில் உணவுவு  தேவைப்படுபவர்கள் என்று எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்து அவர்களுக்கு உணவளித்து வருகிறோம்.
அதுமட்டுமின்றி இதுபோன்ற உணவு வழங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் உணவினை சமைத்து அவர்கள் மூலமாக கொண்டு சேர்க்கவும் முயற்சித்து வருகிறோம்.

சமூக வலைதளங்களில் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதிலும் அதனை இதற்கு பயன்படுத்திக் கொண்டால் என்ன என்று யோசித்து இன்ஸ்டாகிராமில் @Better2gether.trichy என்றும் ஈமெயில் மூலமாக better2togethertrichy@gmail.com என்ற  இணைய முகவரி மூலமாகவும்  தொடர்பு கொண்டால் தேவைப்படுபவர்களுக்கு தேடிச் சென்று உணவு அளிக்க தயாராக இருக்கிறோம் என்று கூறுகிறார் இந்த இளம் சேவகி பிரத்தீயா பாலமுருகன்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd