கடந்த 14.12.2021-ந்தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவானைக்காவல் நெல்சன்ரோட்டில், 8ம் வகுப்பு படித்து வந்த சிறுமியை 3 மாதங்களாக காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, குழந்தை திருமணம் செய்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சமூக நல அலுவலரிடமிருந்து பெறப்பட்ட புகாரின்பேரில், விசாரணை செய்தததில் திருவானைக்காவல் நெல்சன்ரோட்டை சேர்ந்த எதிரி முருகேசன் 21/26 த.பெ.ஜெயராமன் என்பவரை கைது செய்து, எதிரி மீது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் புலன் விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு, கடந்த 14.04.2022-ந்தேதி மேற்படி எதிரி முருகேசன் மீது குற்றப்பத்திரிக்கையை புலன் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். இன்று 11.03.2026-ந்தேதி மேற்படி வழக்கில் திருச்சிராப்பள்ளி மாண்பமை அமர்வு நீதிபதி, மகிளா நீதிமன்றம் அவர்களால் எதிரி முருகேசன் என்பவருக்கு போக்சோ வழக்கின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.5000/- அபராதமும், குழந்தை திருமணம் தடை சட்டத்தின் கீழ் 1 ஆண்டு தண்டனை மற்றும் ரூ.5000/-அபராதமும் என 20 ஆண்டுகள் தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதம் என தீர்ப்பு வழங்கப்பட்டு, இந்த சிறை தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணைக்கு சாட்சிகளை குறித்த காலத்தில் ஆஜர்படுத்தியும், இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிக்கு தண்டனை பெற்றுத்தந்த ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் நிலைய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாரட்டினார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments