திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வருண் குமார் பதவி ஏற்றவுடன் பொதுமக்கள் புகார் தெரிவிக்க தனி செல்போன் எண் 9487464651 – என்ற எண்ணை அறிவித்தார்.
இந்த தொலைபேசி எண்ணுக்கு பொதுமக்கள் கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையில், புலிவலம் காவல் நிலையம் – பகலவாடி பகுதியில் வயல்காட்டில் கள்ளசாராய ஊரல் போட்டு அவ்வப்போது சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த லோகநாதன் (50) என்பவரது இடத்தை சிறப்பு படையினருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் நேரில் வந்து ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு வயல் காட்டில் சாராயம் காய்ச்ச வைத்திருந்த சாராய ஊரல் சுமார் 1150 லிட்டர், ஆறு பேரல்களை கண்டுபிடித்தார். மேலும் சிறிதளவு காய்ச்சிய கள்ளசாராயம் கண்டுபிடிக்கப்பட்டது. கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த லோகநாதன் கைது செய்யப்பட்டார்.
புகார்களுக்கு பிரத்தியோக செல் நம்பரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்த மூன்று நாட்களுக்குள் சுமார் 1200 லிட்டர் சாராய ஊரல் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் அனைத்து புகார்களுக்கும் 9487464651 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments