Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி ஸ்ரீரங்கம்:மாநகராட்சி பள்ளி நிலம் ஆக்கிரமிப்பு – விளையாட்டு மைதானம் கோரி பொதுமக்கள் போராட்டம்.

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில், முன்னாள் ரங்கபவன் திருமண மண்டபத்திற்கு எதிரே மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 5000 சதுர அடி நிலம் உள்ளது. இந்த நிலத்தின் மையப்பகுதியில் ஒரு மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் ஆண்டுக்கு ஒருமுறை ஸ்ரீ ரங்கநாதசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். இந்த ஒரு நாள் வைபவத்தை நடத்துவதற்கு மட்டுமே ஒரு குறிப்பிட்ட சங்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலத்தின் அருகிலேயே மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுதந்திர காலத்திற்கு முன்பிருந்தே இயங்கி வரும் இந்த பள்ளியில், தற்போது 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இடநெருக்கடி காரணமாகவும், விளையாட்டு மைதானம் இல்லாததாலும் பள்ளியின் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு நாள் உபயத்திற்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில், ஆண்டு முழுவதும் அந்த இடத்தை சங்கத்தினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
மாநகராட்சிக்கு சொந்தமான அந்த இடத்தில் சுற்றுச்சுவர் எழுப்பவும், ஆழ்துளை கிணறு (Borewell) அமைக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். பள்ளிக் குழந்தைகள் விளையாடுவதற்கோ அல்லது வாகனங்களை நிறுத்துவதற்கோ இடமில்லாத சூழல் உருவாகியுள்ளது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் திரண்டு ஆக்கிரமிப்பு பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். இது தொடர்பாக கடந்த 20 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது, உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை வட்டாட்சியர் தலைமையில், வார்டு கவுன்சிலர், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற

அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் தங்கள் தரப்பு
சாதாரண தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் மாநகராட்சி நிர்வாகம், இவ்வளவு பெரிய நிலம்ஆக்கிரமிக்கப்படுவதை கண்டும் காணாமல் இருப்பது ஏன்?” என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். தமிழக அரசும், மாநகராட்சி நிர்வாகமும் தலையிட்டு, இந்த நிலத்தை மீட்டு பள்ளியின் விளையாட்டு மைதானமாக மாற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.


திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *