திருச்சி ஸ்ரீரங்கம் பழைய கொள்ளிடம் பாலம் இடிந்து புதிய பாலத்தில் விழும் அபாயம்
1924 ஆண்டு ஆங்கிலேயரால் 24 தூண்களால் கட்டப்பட்ட துவங்கப்பட்ட கொள்ளிடம் இரும்பு பாலம் 1928 ஆண்டு முழுவதும் கட்டி முடிக்கப்பட்டு பொது மக்களின் பொது போக்குவரத்து பயன்பாட்டிற்காக அப்போது திறக்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் டோல்கேட் இணைக்கும் கொள்ளிடம் பாலம் அதன் ஆயுட்காலம் 60 ஆண்டுகளை கடந்து நிறைவடைந்த நிலையில் பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக 2007 கனரக போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. கேரளா கர்நாடகா நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பொழிவால் மூன்று இலட்சம் கனஅடி மேல் தண்ணீர் காவேரி - கொள்ளிடம் வெள்ள பெருக்கு ஏற்பட்டு கொள்ளிடம் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்காலும் ஆற்றுப்படுகையில் தொடர் மணல் திருட்டாலும் 94 ஆண்டுகளாக கம்பீரத்துடன் நின்ற இரும்பு பாலம் கடந்த 2018 ஆகஸ்டு மாதம் 18 தேதி இரவு 08:00 மணியளவில் கொள்ளிடத்தின் தூண் எண் 18-19 இடிந்து தண்ணீரில் சாய்ந்து விழுந்தது.
அதில் கொள்ளிடம் பாலத்தின் தூண் எண் 20 சேதம் அடைந்திருந்தது. தற்போது தூண் எண் 20 வழியாக தான் தண்ணீர் கடந்து செல்வதால் அங்கு மண் அரிப்பு ஏற்பட்டு பாலம் சரிந்து விழக்கூடிய ஆபத்து இருக்கிறது. பழைய கொள்ளிடம் பாலம் அருகிலேயே புதிதாக சென்னை நேப்பியர் பாலம் வடிவில் சுமார் 77 கோடி மதிப்பீட்டில் 2012 புதிய பாலம் கட்டும் பணி தொடங்கபட்டு பணிகள் நிறைவடைந்து 2016 ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கொள்ளிடம் பாலம் காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
*ஏற்கனவே சேதமடைந்த தூண் எண் 20 அதிக விரிசல் காணப்படுவதால் எப்போது வேண்டுமானாலும் தூண் சரிந்து புதிய பாலத்தின் தூண் மீது விழக்கூடிய ஆபத்து உள்ளது. அப்பகுதி மக்களும் ஆபத்தை உணராமல் பாலத்தின் அடி பகுதியில் குளித்துவிட்டு செல்கிறார்கள். இதன் காரணமாக ஏற்கனவே பாதி சரிந்த தூண் எண் 20 முற்றிலும் அதை அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை சார்பாக எழுத்து பூர்வமாக எச்சரிக்கையும் அங்கு விடுக்கப்பட்டுள்ளது. வேறு எதுவும் அங்கு அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் பொதுப்பணித் துறையும் நெடுஞ்சாலை துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய.. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP