Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

10 லட்சம் விதைப் பந்துகள் உருவாக்கி திருச்சி எஸ்.ஆர்.எம் பசுமை பாரதம் படைத்த பிரம்மாண்ட உலக சாதனை

திருச்சிராப்பள்ளி எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமங்களின் சார்பாக  2023ஆம் ஆண்டினை அர்த்தமுள்ளதாக மாற்றும் பொருட்டு எங்கள் திருச்சிராப்பள்ளி எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வளாகத்தில் இன்று நவம்பர் (18-11-2023)  உலகம் போற்றும் விதமாக உயர்ந்த இலட்சியத்துடன் மாபெரும் உலக சாதனை ஒன்றினைப் படைத்துள்ளோம். இந்த மாபெரும் உலக சாதனையை எலைட் உலக சாதனை (ELITE WORLD RECORDS) புத்தகம் அங்கீகரித்துள்ளது.

காடுகளின் பரப்பளவை அதிகரித்து பசுமைத் தமிழகம் (Green Tamil Nadu Mission) உருவாக்கும் நோக்கத்தில் எங்களுடைய எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமங்களில் பயிலும் மாணவ மாணவிகள் ஒன்றாக இணைந்து கல்லூரி வளாகத்தில் 2 மணி நேரத்தில் விதைப் பந்துகளை உருவாக்கினார்கள். இந்த நிகழ்வு “தொடர்ச்சியாக 2 மணி நேரம் விதைப் பந்துகளை உருவாக்குதலில் அதிக நபர்கள் பங்கு கொள்ளுதல்” எனும் மாபெரும் எலைட் உலக சாதனையை படைத்துள்ளது. இந்த உன்னதமான நிகழ்வினை எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமங்களின் தலைவர் (Chairman) முனைவர் சிவக்குமார்  தலைமை தாங்கி நடத்தினார்கள். எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் மூத்த பேராசிரியர் & கணிணி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவர் (DEAN) முனைவர் ஜெகதீஷ் கண்ணன்  முன்னிலை வகித்தார்கள். எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமங்களின் (DIRECTOR) இயக்குனர் மால்முருகன்  மேற்பார்வையிட, பேராசிரியர்கள் அனைவரும் இணைந்து மாணவ மாணவிகளை ஒழுங்குபடுத்தி விதைப் பந்துகளை உருவாக்கினார்கள்.  

இந்நிகழ்விற்கு எலைட் உலக சாதனை (ELITE WORLD RECORDS) நிறுவனத்தின் (Adjudicator) அட்ஜுடிகேட்டர்  ரக்ஷிதா நேரில் வருகைபுரிந்து ஆய்வுகளை மேற்கொண்டார்கள். உலக சாதனை விதிகளின் படி 2 மணி நேரத்தில் 3025 மாணவர்கள் ஒன்றிணைந்து விதைப் பந்துகளை செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர் என்ற அறிவிப்புடன் “தொடர்ச்சியாக 2 மணி நேரம் விதைப் பந்துகளை உருவாக்குதலில் அதிக நபர்கள் பங்கு கொள்ளுதல்” எனும் எலைட் உலக சாதனை சான்றிதழை எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமங்களின் தலைவர், துறைத் தலைவர் (DEAN), இயக்குனர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரிடம் வழங்கி கௌரவித்தார்கள்.

விதைப் பந்துகளால் பசுமையான பாரதம் படைத்த இந்த மாபெரும் உலக சாதனை
முயற்சியால் காடுகள் அதிகரிக்கும். உலக வெப்பமயமாதல் தடுக்கப்படும். மழை அதிகரித்து
நிறைவான தண்ணீர் கிடைக்கப்பெறும். இயற்கையுடன் பல்லுயிர்களும் பயன்பெறும்.

வருங்கால சமூகம் நலமாக வாழும், இது போன்ற நல்உணர்வுகளை மாணவர்களுக்கு உலகிலேயே முதன்முறையாக  திருச்சி இருங்களூரில் எஸ்.ஆர்.எம் கல்வி குழும வளாகத்தில் எலைட் உலக சாதனைக்காக 3025க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே சமயத்தில் (1கோடி விதைகள் அடங்கிய)10 லட்சம் விதைப் பந்துகளை 2 மணி நேரத்தில்  தயாரித்து எலைட் உலக சாதனை சாதனை நிகழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *