திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் செங்காட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் மனைவி நாகேஸ்வரி மகள் அப்ஸரா, லயாஸ்ரீ ஆகியோருடன் நெசவாளர் காலனி பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி பணிபுரியும் மேலக்குன்னுப்பட்டி அரசு பள்ளியில் இளைய மகள் லயாஸ்ரீ ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
Advertisement
லயாஸ்ரீ தான் சேமித்து வைத்திருந்த தொகையை கொரோனா நிதிக்காக ஐநாவின் யுனிசெப் அமைப்பிற்கு அனுப்பி வைக்குமாறு பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் இரண்டு தவணைகளாக 1134 மற்றும் 750 ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மேற்கு வங்கத்திலிருந்து யுனிசெப் அமைப்பின் இந்திய பிரதிநிதிகள் லயா ஸ்ரீக்கு போனில் தொடர்பு கொண்டு பாராட்டினர்.
இது குறித்து மாணவி லயா ஸ்ரீ கூறும்போது… உலக அளவில் குழந்தைகள் பசியாலும், பட்டினியாலும் கஷ்டப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு ஐ.நாவின் யுனிசெப் உதவி வருவதாகவும், பூகம்பம் வெள்ளப்பெருக்கு தற்போது கொரோனா உள்ளிட்ட பேரிடர்களுக்கு யூனிசெப் உதவி வருகிறது. எனவே உலகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் பயன்பெறும் வகையில் தான் சேமித்த மொத்த பணத்தை 1884 ரூபாயை யுனிசெப் அமைப்பிற்கு அனுப்பி வைத்ததாக கூறினார். இதற்கு மேலும் என்னுடைய சேமிப்பு பணத்தை ஒவ்வொரு மாதமும் அனுப்பி வைப்பேன் என கூறினார். இதன் மூலம் உலகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் பேரிடர்களுக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
Comments