திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை நான்கு சாலை சந்திப்பு பகுதியில் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
பள்ளி – கல்லூரி செல்லும் மாணவர்களும், பணிகளுக்கு செல்லும் ஊழியர்களும், அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கிறார்கள்.
போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காக, அனைத்து துறை அதிகாரிகளை நேரில் வரவழைத்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி களத்தில் நேரில் ஆய்வு செய்தார்.
துவாக்குடி சுங்கச்சாவடியில் (Toll) போக்குவரத்து மாற்றம் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் பஞ்சப்பூர் புறவழிச்சாலை (Bypass road) வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன.
இதற்காகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, துவாக்குடி ஆய்வாளரின் கண்காணிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments