அப்பு ஸ்தலம் என்றழைக்கப்படும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோவில் ராமதீர்த்த தெப்பக்குளம் மிகவும் பிரசித்தி பெற்றது. குளத்தின் சுற்றுசுவர்கள், மைய மண்டபம் உள்ளிட்டவைகள் சிதலமடைந்து இருப்பதால் அதனை புதுப்பிக்க தொடர்ந்து பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.
தமிழ்நாடு அறநிலையத்துறை அனுமதி பெற்று அரசு என்கிற அய்யாதுரை என்ற உபயதாரர் இதற்கு ரூபாய் 25 லட்சம் நிதி கொடுத்து தற்பொழுது தெப்பக்குளத்தில் உள்ள மண்டபங்கள் சுற்றுச்சுவர் உள்ளிட்ட பகுதிகள் முழுவதையும் புதுப்பிக்கும் பணியை இன்று பூஜையுடன் துவங்கி பணிகள் நடைபெற உள்ளது. முன்னதாக இதற்கான பூஜைகள் இன்று நடைபெற்றது.
திருச்சி திருவானைக்காவல் தெப்பக்குளம் ரூபாய் 25 லட்சம் மதிப்பில் புனரமைக்கும் பணி இன்று துவங்கியுள்ளது. திருப்பணியை திருவானைக்காவல் அரசு என்கிற அய்யாதுரை உபயதாரர் வழங்கிய நிதி உதவியுடன் செய்ய உள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments