திருச்சி திருவெறும்பூரில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டத்தில் செய்தியாளர்களை அவமரியாதை செய்த நிர்வாகிகள்

திருச்சி திருவெறும்பூரில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டத்தில் செய்தியாளர்களை அவமரியாதை செய்த நிர்வாகிகள்

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மக்கள் நீதி மையத்தின் திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் பரப்புரையை மேற்கொள்ள இருந்தார்.

 அங்கே செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்கள் அமர இருக்கைகள் வழங்கப்படவில்லை. நீண்ட நேரம் நின்ற பிறகு அவர்களே இருக்கைகளை எடுத்து ஓரமாக போட்டு அமர்ந்தனர். அப்பொழுது நிர்வாகி ஒருவர் வந்து அங்கிருந்து எழுந்து செல்லுமாறு அவர் கூறினார் .அப்போது செய்தியாளர்களுக்கு எங்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று நிர்வாகியிடம் கேள்வி எழுப்பினர் .அவர் அந்த இடத்தை காண்பிக்கும் போது அந்த இருக்கைகளை எல்லாம் எடுத்து நீங்களே வந்து உட்கார்ந்து கொள்ளுங்கள் என்று மீண்டும் அவ மரியாதையுடன் நடத்தினார். இதனால் செய்தியாளர்களுக்கும் மநீம நிர்வாகிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மக்கள் நீதி மையத்தின் ஐடி விங்க் பணிபுரியக்கூடிய பெண் ஒருவர் வந்து சமாதானப்படுத்திய முற்பட்ட பொழுது அவரை கோபமுடன் திட்டி நிர்வாகி அனுப்பினார் .இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுவாக திருவெறும்பூர் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் முருகானந்தம் பல நிகழ்வுகளில் செய்தியாளர்களை அவமரியாதை செய்ததும் செய்திகளுக்கான எந்தவித தகவல்களையும் முறையாக கொடுப்பதில்லை.அவரிடம்  விளக்கம் கேட்க முற்பட்டால் அதற்க்கும் முன்பே உரிய முன்அனுமதி பெற்று  தகவலை பெற வேண்டும்  என பதிலும் வந்துள்ளது.

 மக்கள் நீதி மையத்தின் சார்பாக போட்டியிடும்  வேட்பாளர்  எதையும் கண்டுகொள்ளாமல் இப்பொழுதுதே இவர் இருக்கிறார் என்றால்  வெற்றி பெற்றால் என்ன நிலை ஆகும் என செய்தியாளர்கள் கேட்டுக்கொண்டனர்.

இது மய்ய தலைமை நிர்வாகிகளின் காதுக்கு செல்லுமா என்பது அடுத்த பரப்புரையில் தெரிந்து விடும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU