Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி: முன்விரோதத்தில் தெரு நாய்க்குட்டிகளை அடித்துக் கொன்ற பெண் உட்பட இருவர் கைது

திருச்சிராப்பள்ளி மாவட்டம் கம்பரசம்பேட்டை, வெள்ளாந்தெரு பகுதியில் மீனாட்சி மிஸ்ரா (28), க.பெ. ஜெய்கணேஷ், மற்றும் அவரது வீட்டிற்கு எதிரே புவனேஸ்வரி (30), க.பெ. கணேஷ்பிரபு என்பவர்கள் குடியிருந்து வருகிறார்கள். இரு குடும்பத்தினரிடையே கடந்த சில வருடங்களாக வீட்டு வாசலில் தண்ணீர் தெளிப்பது, மண் கொட்டுவது தொடர்பாக வாய் சண்டை இருந்து வந்துள்ளது.


இந்நிலையில் கடந்த 04.03.2026-ம் தேதி காலை 06.30 மணிக்கு வீட்டு வாசலில் தண்ணீர் தெளிப்பது சம்பந்தமாக இரு தரப்பினருக்கிடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதில் புவனேஸ்வரி என்பவர் எதிரே இருந்த மீனாட்சி மிஸ்ரா மீது கல்லை தூக்கி எறிந்த போது மேற்படி கல்லானது மீனாட்சி மிஸ்ராவின் மூன்று வயது சிறுவனின் வலது காலில் பட்டு காயம் ஏற்பட்ட நிலையில் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்துள்ளனர்.


மேற்படி சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாக, மீனாட்சி மிஸ்ரா என்பவர் 04.03.2026 அன்று காலை 09.50 மணியளவில் தனது வீட்டின் முன்பு இருந்த இரண்டு தெருநாய்க்குட்டிகளை எடுத்து புவனேஸ்வரியின் வீட்டு இரும்பு கதவில் எறிந்ததில் இரண்டு நாய்க்குட்டிகள் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பாக அஜய் பாரத், People For Animal இயக்கத்தின் துணைத்தலைவர் என்பவர் கொடுத்த புகார் மனு மீது ஜீயபுரம் காவல் நிலைய குற்ற எண்.102/26 u/s 325 BNS r/w 11(1) (a) animal cruelty Act (28), .. ஜெய்கணேஷ் மீது 06.03.2026 வழக்கு பதிவு

செய்யப்பட்டது. மேலும், ஜெய்கணேஷ் என்பவர் . 103/26 u/s 296(b), 118(1), 351(2) BNS ACT ன் படி புவனேஸ்வரி (30), க.பெ. கணேஷ் பிரபு மீது 06.03.2026 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.
எதிரிகள்:
மீனாட்சி மிஸ்ரா (28), க.பெ. ஜெய்கணேஷ், வெள்ளாந்தெரு, ஸ்ரீரங்கம் தாலுகா.
புவனேஸ்வரி (30), க.பெ கணேஷ் பிரபு, வெள்ளாந்தெரு, கம்பரசம்பேட்டை, ஸ்ரீரங்கம் தாலுகா, திருச்சி மாவட்டம்.
என்பவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *