Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ரமலான் முன்னிட்டு திருச்சி விஷன் ஃபவுண்டேஷன் மளிகை கிட் வழங்கும் திட்டம்

திருச்சியில் செயல்பட்டு வரும் திருச்சி விஷன் ஃபவுண்டேஷன் சார்பில் ரமலான் மாதத்தை முன்னிட்டு ஏழை மற்றும் தேவையுள்ள குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

“ரம்ஜான் கிராசரி கிட் டிரைவ் 2026” என்ற பெயரில் நடைபெறும் இந்த திட்டத்தின் மூலம் பிரியாணி அரிசி 2 கிலோ, சமையல் எண்ணெய் 1 லிட்டர், சர்க்கரை 1 கிலோ, சேமியா, நெய், முந்திரி, உப்பு, தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

ஒரு மளிகை கிட் தொகை ரூ.970 என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து உதவிட அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. கூகுள் பே மூலம் நிதியுதவி வழங்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உதவி திட்டத்தின் மூலம் ரமலான் மாதத்தில் தேவையுள்ள குடும்பங்களுக்கு ஆதரவாக செயல்பட திருச்சி விஷன் ஃபவுண்டேஷன் முன்வந்துள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *