பண்டிகைகளின் மிக முக்கிய நோக்கமே அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதே! ஏழை எளிய மக்களும் கூடுதல் மகிழ்ச்சியோடு கொண்டாடிட உதவி வருகிறது திருச்சி விஷன் அறக்கட்டளை.
திருச்சி விஷன் அறக்கட்டளை சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு இலவச ரம்ஜான் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவனை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், தினக்கூலி பெண்கள் என 50 குடும்பங்களுக்கு ரம்ஜான் பரிசு தொகுக்கு வழங்கப்பட்டது.
பரிசுத்தொகுப்பில் ஒரு குடும்பத்திற்கு 600 ரூபாய் மதிப்பு உள்ள மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. சுப்பையா நடுநிலைப்பள்ளி, ஹோலி ரெடிமேர்ஸ் நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் இஸ்லாமிய குடும்பங்களை வரவழைத்து பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டன
திருச்சி விஷன் அறக்கட்டளை சார்பில் கடந்த ஆண்டு தீபாவளி அன்று துப்புரவு பணியாளர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆண்டுகளிலும் இதுபோன்ற பண்டிகை காலங்களில் ஏழை – எளிய மக்களுக்கு அறக்கட்டளை சார்பில் பல நலத்திட்ட உதவிகள் நன்கொடையாளர்களின் உதவியோடு செய்திட திட்டமிடப்பட்டுள்ளன.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments