Wednesday, September 17, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி விஷன் மாணவ பத்திரிகையாளர் திட்டம் -வருங்காலப் பத்திரிகையாளர்களை வரவேற்கிறோம்

சமூக மாற்றத்துக்கு விதையாக, சமூக வளர்ச்சிக்குப் பாதையாக இருக்க விரும்பும் கல்லூரி மாணவர்களுக்குக் களம் அமைக்கிறது திருச்சி விஷன்.கையிலிருக்கும் செல்போனே தலைசிறந்த தகவல் தொடர்பு ஊடகமாக மாறியிருக்கும் இந்த நவீன காலத்தில் யூடியூப், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் எனப் பல வழிகளில் ஒவ்வொருவருக்கும் ஏராளமான செய்திகள் வந்து சேர்கின்றன. அந்தச் செய்திகளைப் படிக்கும் ‘வாசகர்’ நிலையிலிருந்து, செய்தியை உருவாக்கி உலகத்துக்கு வழங்கும் ‘செய்தியாளர்’ நிலைக்கு உங்களை உயர்த்த, களம் அமைத்துத்தருகிறது இந்தத் திட்டம்.

திருச்சி மாவட்ட கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஊடகப் பயிற்சியளிக்கும் திட்டமொன்றை திருச்சி விஷனும் மக்கள் ஊடக மையமும் இணைந்து செயல்படுத்தவுள்ளன. தொலைக்காட்சி நிறுவனங்களிலும் டிஜிட்டல் தளங்களிலும் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு உதவும் வகையில் இந்த பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவியருக்கு Newsgathering, Reporting, Research, News writing, Camera handling, Editing and Production போன்றவற்றில் பயிற்சியளிக்கப்படும். மூன்றுமாத கால பயிற்சிக்குப் பின்னர் சான்றிதழும் வழங்கப்படும். இதற்குக் கட்டணம் எதுவும் இல்லை. சமூக அக்கறையும் பத்திரிகையாளர் ஆகவேண்டும் என்ற ஆர்வமும் கொண்ட கல்லூரி மாணவ மாணவியர் இத்திட்டத்தில் சேர Google form முலமாக https://forms.gle/1nVZACVkcBTv9pkn9 விண்ணப்பங்களை 04.09.23ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும் .

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *