Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி வருகை: ₹5,655 கோடி திட்டங்கள் தொடக்கம் – என்.டி.ஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு

திருச்சி பஞ்சப்பூரில் நடைபெறும் அரசு விழா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

இந்நிகழ்வில் எரிசக்தி துறை, நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு துறைகளில் ரூ.5,655 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, சில திட்டங்களை திறந்து வைக்க உள்ளார்.

மேலும், ஐந்து வழித்தடங்களில் புதிய இரயில் சேவைகளையும் கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார்.

இந்த நிகழ்வுகளில்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அமமுக பொது செயலாளர் டி டி வி தினகரன், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் உள்ளிட்ட
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

முன்னதாக இன்று மாலை 5 மணிக்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் பிரதமர் வந்து இறங்குகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் பஞ்சப்பூர் ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கி முதலில் அரசு நிகழ்ச்சி நடைபெறும் மேடைக்கு வருகிறார். அதன் பின்பு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பொது கூட்ட நிகழ்வில் கலந்து கொள்கிறார். பின்பு மீண்டும் சாலை மார்க்கமாக திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரின் கொடிகள் அமைக்கப்பட்டு பிரதமரின் ஆளு உயர புகைப்படத்துடன் கூடிய கட்அவுட் உள்ளிட்டவைகள் அமைத்து பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

திருச்சிக்கு இன்று மாலை விமானம் மூலம் பிரதமருக்கு வருகை தர உள்ளதால் திருச்சி விமான நிலையம் திருச்சி பஞ்சப்பூர் அரச நிகழ்ச்சி பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் திருச்சி எடமலைப்பட்டி புதூர் வழியாக செல்லும் வாகனங்கள் முழுவதும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்படுகின்றன.

திருச்சி பஞ்சப்பூரில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், பங்கேற்க அரசியல் கட்சியினர் கார்கள் மற்றும் வாகனங்களில் வருகைதந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் தற்போதே திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. எடமலைப்பட்டி புதூர், ஜங்ஷன் ரயில்வே பாலம் உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *