திருச்சி மேற்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு தொடர்ந்து அனுமதியின்றி நபர்கள் வருவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என கே.என்.நேரு பேட்டி

திருச்சி மேற்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு தொடர்ந்து அனுமதியின்றி நபர்கள் வருவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என கே.என்.நேரு பேட்டி

திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற தொகுதியில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஜமால் முகமது கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. அதன் மேல் தளத்தில் வாக்கு எண்ணிக்கை அறை தயார் செய்யப்பட்டு வருகிறது. மேல்தளத்தில்  சிஆர்பிஎஃப் பாதுகாப்புவீரர்கள் தங்கியுள்ளனர். 

கடந்த 20ஆம் தேதி மடிக்கணினி மற்றும் செல்போனை அவர்கள் பயன்படுத்துவதால் அவர்களை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்கும்படி நேரிலும் அவர்களை வேறு இருப்பிடத்திற்கு மாற்றி விடுவதாக கூறினார்கள். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை அவர்கள் அனைவரும் அங்கேயே தங்கி இருப்பதாகவும் தொடர்ந்து மடிக்கணியை பயன்படுத்துவதும் சந்தேகத்துக்கு இடமாக உள்ளது. தாங்கள் உடனடியாக இதில் தலையிட்டு  மாற்ற வேண்டும் பாதுகாப்பை உறுதி செய்து தருமாறு திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் விஸ்வநாதனிடம் திமுக வேட்பாளர் கே.என் என் நேரு நேரில் புகார் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக வேட்பாளர் கே என் நேரு  இன்று காலை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு மடிக்கணினியை எடுத்துச் செல்வதற்கு முகவர்கள் அனுமதி கொடுக்கவில்லை . அனுமதி இல்லாமல் காவலர்கள் எவ்வாறு மடிக்கணினியை செல்ல அனுமதித்தார்கள் வாக்குப் பெட்டியில் உள்ள வாக்குகளை மாறுதல் செய்திருக்க முடியுமா என்ற ஐய்யப்பாடு எழுகிறது. ஆகவே மடிக்கணினியை  பறிமுதல் செய்து பாதுகாப்பாக வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்.

இதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சிசிடிவி கேமராக்களை பொருத்த அவர்கள் வந்தார்கள் என விளக்கம் அளித்து உள்ளதாக செய்தியாளர்களிடம் கே.என்.நேரு தெரிவித்தார்.வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்புகள் நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளதா என்ற கேள்விக்கு நம்பித்தான் ஆக வேண்டும் வேறு என்ன வழி இருக்கிறது என்றும் பதிலளித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu