திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணப்பட்டுவாடா - திமுக வேட்பாளர் நேருவை கைது செய்து தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி அதிமுக வேட்பாளர் புகார் மனு

திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணப்பட்டுவாடா - திமுக வேட்பாளர் நேருவை கைது செய்து தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி அதிமுக வேட்பாளர் புகார் மனு

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள காவல் நிலையங்கள் நேரடியாக ஒவ்வொரு காவலர்களின் விபரங்களுடன் தேர்தலுக்கு பண கவர் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு கவரியிலும் பணம் வைத்து வினியோகிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பப்பட்டது.


 திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் பணம் பட்டுவாடா செய்த கவருடன் விசாரணை நடத்தினார். திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட காவல்நிலையங்களில் பண கவர் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அரசு மருத்துவமனை காவல் நிலையம் மற்றும் தில்லை நகர் காவல் நிலையத்தில் உள்ள இரண்டு எழுத்தர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .மேலும் மற்ற காவல் நிலையங்களில் உள்ள ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர் இடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 
திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் 6 பேரையும் பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்
 

இதையடுத்து திருச்சி மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பத்மநாதன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட வருவாய் அதிகாரியிடம் காவல்நிலையத்தில் காவலர்களுக்கு கவர் கொடுத்த விவகாரத்தில் நேருவை கைது செய்ய வேண்டும். அவரை வேட்பாளரிலிருந்து  தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனுவை அளித்தார் .

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக வேட்பாளர் பத்மநாதன்  ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் நான் வெற்றி பெறுவேன்.  தற்பொழுது காவலர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் 6 காவல்துறையினரை பணியிடை நீக்கம் செய்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்னும் வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கையின் போது பாதுகாப்பில் இருக்கும் காவலர்கள் எப்படி ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்துவார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டார் . 

முன்னதாக மாவட்ட வருவாய் அதிகாரியிடம் புகார் கொடுத்துவிட்டு வந்த அதிமுகவினர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில்  திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW