எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு’ என யாராவது சொன்னால், `மனநல மருத்துவரைப் பார்’ என்று அறிவுரை சொல்பவர்களைவிடவும், `செல்லப்பிராணிகளுடன் நேரம் செலவிடு’, `பூச்செடிகள் வளர்த்துப்பாரேன்’ என்று மாற்று யோசனைகள் சொல்பவர்கள்தான் இன்றைக்கு அதிகம். உண்மையில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது, மனிதர்களின் மனநலனுக்கு எந்தளவுக்கு உதவும்? மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கத்திடம் கேட்டோம்.
பொதுவாகவே, மனதளவில் ஒருவர் துவண்டுபோய் இருக்கும்போது, `நமக்கு இப்போது யாராவது துணையாக இருந்தால் நன்றாக இருக்குமே’ என்ற எண்ணம் அதிகமாக வரும். அதேநேரம், உடனிருக்கும் மனிதர்களிடம் அதைக் கேட்பதில் தயக்கமும் இருக்கும். தயக்கத்தை மீறிக் கேட்டாலும்கூட, இன்றைய பரபரப்பான உலகில், நடைமுறையில் இது சாத்தியப்படுவதும் கடினம்தான். வேறு என்னதான் செய்வது என்றால், இப்படிப்பட்ட திக்கற்ற நேரங்களில், செல்லப்பிராணிகளின் அன்பை நாடலாம்!என்கிறார் திருச்சியில் பெட் இண்டஸ்ட்ரியில் அசத்தி வரும் ஹில்டா சகாயமேரி நித்யா …பெட் கேலக்ஸியின் இணை நிறுவனராக உள்ளார்.
தன்னுடைய முதுகலை பட்டப்படிப்பை முடித்த பிறகு டெலிகாம் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் இன்ஜினியரிங் துறையில் ஏற்பட்ட ஆர்வத்தால் 15 ஆண்டுகள் இன்ஜினியரிங் இண்டஸ்ட்ரியில் பணியாற்றியயுள்ளார். இருப்பினும் தனக்கு பிடித்தவற்றை செய்ய வேண்டுமென்ற ஆர்வம் இவரை விட்டுவிடவில்லை. அதனால் தொடங்கப்பட்டது தான் இந்த Pet Galaxy முதல் E-Commerce மொபைல் ஆப். நாய், பூனை பறவைகளுக்கென்று உருவாக்கப்பட்ட இதில் செல்ல பிராணிகளுக்கான உணவு மற்றும் அவற்றை பராமரிக்க தேவையான தேவையான பொருள்களையும் வாங்கிக் கொள்ளும் வகையில் உள்ளது.
செல்லப்பிராணிகள் மீது அவருக்கு இருந்த காதல் மேலும் மேலும் செல்லப்பிராணிகளுக்கென ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை அவருக்கு ஏற்படுத்தி உள்ளது திருச்சியில் இரண்டு கால்நடை கிளினிக் நடத்தி வருகிறார்.சிறந்த கால்நடை மருத்துவர்களும் அதில் பணியாற்றி வருகின்றனர். இவர் செய்யும் ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணம் கடின உழைப்பும் செய்யும் வேலையின் மீது இவர் கொண்டுள்ள பற்றுமே ஆகும்.
திருச்சியில் இவர் நடத்திய நாய் கண்காட்சி இவருக்கு என தனி ஒரு அங்கீகாரத்தையும் உருவாக்கியது என்னலாம் மூன்றே ஆண்டுகளில் இவர் அடைந்திருக்கும் வெற்றியானது செல்லப்பிராணிகள் மீது அவர் கொண்டுள்ள பிரியமும் அதற்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்று அவருடைய நோக்கமும் தான் காரணம். சிறந்த தொழில் முனைவோராக நினைக்கும் அனைத்து பெண்களுக்கும் இவர் பெரிய உதாரணம் ..
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments