Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மண்டலம்: 17,015 தொழிலாளர்களுக்கு ₹4.23 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.சி.வெ.கணேசன் அவர்கள் ஆகியோர் இன்று (07.10.2025) திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் திருச்சிராப்பள்ளி பெருமண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் பணிபுரியும் அலுவலர்களின் பணி திறனாய்வு கூட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள 17015 உறுப்பினர்களுக்கு ரூ.4.23 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேருரையாற்றினார்கள்.

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள திருச்சிராப்பள்ளி மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல் மற்றும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 17015 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.4.23 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை. மகப்பேறு உதவித்தொகை. ஓய்வூதியம், கண்கண்ணாடி. இயற்கை மரணம், விபத்து மரணம் மற்றும் மகளிருக்கான ஆட்டோ மானியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.

இதில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 5929 பயனாளிகளுக்கு ரூ.93.92 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2118 பயனாளிகளுக்கு ரூ.30.65 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 722 பயனாளிகளுக்கு ரூ.13.73 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளும், திருவாரூர் மாவட்டத்தில் 350 பயனாளிகளுக்கு ரூ.8.93 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 129 பயனாளிகளுக்கு ரூ.4.12 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 585 பயனாளிகளுக்கு ரூ.7.18 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளும், பெரம்பலூர் மாவட்டத்தில் 1531 பயனாளிகளுக்கு ரூ.47.68 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளும், அரியலூர் மாவட்டத்தில் 1891 பயனாளிகளுக்கு ரூ.75.18 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளும், திண்டுக்கல் மாவட்டத்தில் 2982 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளும், தேனி மாவட்டத்தில் 778 பயனாளிகளுக்கு ரூ.19.36 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 17015 பயனாளிகளுக்க ரூ.4.23 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.சி.வெ.கணேசன் அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.

இதனைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி பெருமண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்கிளல் உள்ள தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அலுவலர்களுக்கான பணித்திறனாய்வு கூட்டத்தில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பெரு முயற்சியால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அனைத்து வகை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் அதிக அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு அவர்களின் சமூக பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது என்றும், வெளி மாநிலத்தொழிலாளர்கள் மிகுந்த பாதுகாப்பு உணர்வோடு தமிழ்நாட்டில் பணிபுரிவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். மேலும், குழந்தைத்தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க ஒவ்வொருவரும் செயலாற்றிட வேண்டும் என்றும், மனிதனை மனிதனே அடிமையாக்கும் கொத்தடிமைத் தொழில் முறையினை முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்குமாறும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசு செயலாளர் அவர்கள் நலத்திட்ட உதவிகள் கால தாமதமின்றி உடனுக்குடன் அனைத்து தொழிலாளர்களையும் சென்றடையும் வகையில் துரிதமாக செயல்படும்படி அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வுகளில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசு செயலாளர் திரு.கே.வீரராகவராவ்,இ.ஆ.ப..அவர்கள், ஆணையர் திரு.சி.அ.ராமன்.இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்.இ.ஆ.ப..அவர்கள். மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ர.ராஜலட்சுமி. கூடுதல் ஆணையர் முனைவர் ஆ.திவ்யநாதன், தொழிலாளர் இணை ஆணையர்கள் திருமதி.லீலாவதி (திருச்சிராப்பள்ளி), திரு.பெ.சுப்பிரமணியன் (திண்டுக்கல்) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *