திருச்சி மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பது சாரதாஸ் ஜவுளி கடை. இக்கடையின் உரிமையாளர் மணவாளன் பிள்ளை (90). இவர் திருச்சி மற்றும் சென்னையில் ஜவுளிக்கடையை வைத்து ஒரு மாபெரும் அடையாளத்தை உருவாக்கினார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் மக்கள் குறைந்த விலையில் ஆடைகளை வாங்குவதற்கு இக்கடையை தேடி வருவது வழக்கம்.
இந்த நிலையில் கடையின் உரிமையாளர் மணவாளன் பிள்ளை வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருந்தார். மேலும் திருச்சி என் எஸ் பி சாலையில் உள்ள ஜவுளிக்கடையில் அவரது அலுவலகத்தில் இன்று இருந்த பொழுது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் தொழில் அதிபர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து என் எஸ் பி கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments