Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

20லட்ச ரூபாய் திருப்பி கொடுக்காதவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து 10 நாட்கள் சித்ரவதை  -இருவர் கைது

20லட்ச ரூபாய் பணத்தை திருப்பி கொடுக்காதவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு 10 நாட்கள் விடுதியில் வைத்து சித்ரவதை  -இருவர் கைதுதிருச்சி எடமலைப்பட்டிபுதுார் எஸ்ஐஎஸ் அப்பார்ட்மெண்ட்டை சேர்ந்தவர் கோபிநாத் என்பவர் 20 லட்சம் ரூபாய் பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளார். மும்பையை சேர்ந்த மிட்டல் ஷா பல நாட்கள் ஆகியும் பங்குத்தொகை எதுவும் தராததால், தனது பணத்தை கோபிநாத் திரும்பி கேட்டு உள்ளார்.

ஆனால் மிட்டல் ஷா தரவில்லை. இந்நிலையில் தொழில் விஷயமாக சென்னை வந்த மிட்டல்ஷாவை கோபிநாத்திடம் பேசி பிரச்சினையை தீர்த்துக்கொள்ளலாம் என்று கூறி  சென்னை திருவேற்காட்டை சேர்ந்தவர் முனியப்பன்(43) என்பவர் திருச்சிக்கு அழைத்து வந்துள்ளார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் ஹோட்டடல் பிளாசாவில் தங்கவைக்கப்பட்ட மிட்டல்ஷா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து உள்ளனர். பணத்தை திரும்பி தரும் வரை விடமாட்டோம் என்று ஹோட்டல் ரூமிலேயே 10 நாட்கள் வைத்து அடைத்து வைத்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து காரில் கடத்த முயன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியை கார் கடந்த போது மிட்டல்ஷா கூச்சலிடவே, அவரை காரில் இருந்துதள்ளி விட்டு, கோபிநாத்தும், முனியப்பனும் தப்பி ஓடி உள்ளனர்.  திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மிட்டல்ஷாவை  கண்டோன்மெண்ட் போலீசார் அனுமதித்துள்ளனர்.இது குறித்து வழக்கு பதிந்து கோபிநாத், முனியப்பனை கண்டோன்மென்ட் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *