Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy's heroes

திருச்சி ஆட்சியருக்கு இரண்டு விருது

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென சிறப்பாக சேவை புரிந்தமைக்கான தமிழக அரசின் சிறந்த மாவட்ட ஆட்சித்தலைவர் விருது (2016 – 2017) நிதியாண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பணிபுரிந்த 3 மாவட்டங்களை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இந்த நிதியாண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென சிறப்பாக சேவை புரிந்தமைக்காக திருச்சிராப்பள்ளி மாவட்டம் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் ரூ.25 ஆயிரத்திற்கான காசோலை, 10 கிராம் தங்க பதக்கம் மற்றும் பாராட்டுச்சான்றிதழை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமாரிடம் வழங்கினார்.

இதே போல், தமிழ் வளர்ச்சி துறையின் 2022-2023 ஆண்டின் மானியக்கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், அலுவலகங்கள், கடைகள், நிறுவனங்கள், உணவகங்கள் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகள் தமிழில் அமைந்திருத்தல் உள்ளிட்ட வகையில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்றி வரும் மூன்று மாவட்டங்களைத் தெரிவு செய்து பரிசுத்தொகையாக தலா 2.5 இலட்சம், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியன மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கிச் சிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் ஆட்சி மொழித்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக திருச்சிராப்பள்ளி மாவட்டம் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கான பரிசுத் தொகை ரூ.2.5 இலட்சம், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமாரிடம் வழங்கினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *