திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே பெருவளை்வாய்க்கால் தண்ணீரில் நேற்று மூழ்கி ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த இரு குழந்தைகள் மாயமானதால் குழந்தைகளை தேடும் பணியில் சமயபுரம் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். இன்று காலை இரு குழந்தைகளும் சடலமாக மீட்டனர்.
சமயபுரம் பள்ளிவிடை பாலம் அருகே பெருவளை வாய்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் கரையோரத்தில் ரவிச்சந்திரன் (ஆட்டோ ஓட்டுநர்), இவரது மனைவி அனிதா, இவர் திருச்சி தில்லைநகர் 3 வது குறுக்கு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு தர்ஷினி (6), நரேன் (4) ஆகிய இருகுழந்தைகள் உள்ளனர்.
Advertisement
தம்பதிகள் இருவரும் வேலைக்கு செல்லும் நேரத்தில் குழந்தைகள் இருவரையும், அனிதாவின் தாயார் கவனித்து வந்துள்ளார். இன்று மாலை குழந்தைகள் இருவரும் இயற்கை உபாதைகள் கழிக்க பெருவளை வாய்க்காலின் கரையோரத்தில் உட்கார்ந்திருந்துள்ளனர். வீட்டிலிருந்து பாட்டி குழந்தைகள்இருவரையும் காணவில்லையே என வாய்க்கால் கரையோரத்தில் பார்த்த போது, அவர்கள் அணிந்திருந்து காலணிகள் மட்டும் கரையோரத்தில் கிடந்தன. குழந்தைகள் இருவரையும் காணவில்லை. குழந்தைகள் இருவரும் வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி மாயமானதாக கூறிய நிலையில் சமயபுரம் தீயணைப்பு படை வீரர்கள் குழந்தைகள் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், தலைமையில் சமயபுரம் உதவி காவல் ஆய்வாளர் மாரிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் வந்திருந்து, பெருவளை வாய்காலில் வரும் தண்ணீரை முற்றிலுமாக நிறுத்த பொதுப்பணித்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டும், தண்ணீரில் மாயமான குழந்தைகளை இரவு நேரங்களில் தேடவும் சமயபுரம் மற்றும் ஸ்ரீரங்கம் தீயணைப்பு படை வீரர்களுக்கு கோட்டாட்சியர் உத்தரவிட்டார். 12 மணி நேரம் தீவிரமாக தேடிய நிலையில் இன்று காலை குழந்தைகள் இருவரையும் அதே பகுதியில் சடலமாக மீட்டனர். உடலை கைப்பற்றிய சமயபுரம் போலீசார் உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தண்ணீரில் மூழ்கி இறந்த குழந்தைகள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Advertisement
Comments