கல்லணை நடு கரை பகுதி ஊர்களி காட்டுப்பன்றிகள் கடித்து கொதரியதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாய அணி மாவட்ட மற்றும் விவசாயி என இரண்டு பேர் காயம் அடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கல்லணை நடு கரை பகுதி ஊர்வலான கிளிக்கூடு, , உத்தமர் சீலி, பனையபுரம், திருவளர்சோலை, பொண்ணுரங்கபுரம் உள்ளிட்ட பகுதிகள் ஆகும்.
இந்த பகுதிகளில் பிரதான தொழிலாளாக விவசாயமே உள்ளது. விவசாயத்தை நம்பி அப்பகுதி மக்களும் வாழ்வை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கல்லணை நடுகரை பகுதி ஊர்களில் காவேரி மற்றும் கொள்ளிட ஆறுகளுக்கு இடையே செல்வதால் காட்டு பன்றிகள் காவிரி மற்றும் கொள்ளிட ஆறுகளில் தஞ்சம் .
அப்படி புகுந்துள்ள காற்று பன்றிகள் இந்த கல்லணை நடுகரை பகுதியில் ஊர்களில் பயிர் செய்யப்படும் நடவு, வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை பெரிய அளவில் சேதப் படுத்துகிறது.
இதனால் விவசாயிகள் பெரும் சேதத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காட்டு பன்றிகளை பிடிக்க வேண்டுமென வானத்துறையினருக்கும் அரசுக்கும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.
இருந்தும் காட்டு பன்றிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் அது விளை பயிர்களை சேதப்படுத்துவதும் அதிகரித்து வருகிறது.
அப்படி நேற்று கவுத்தரசநல்லூர் பகுதியில் கொய்யா தோப்புக்குள் நுழைந்த காற்றுப்பன்றி அங்கு இருந்த விவசாயி சகாதேவன் (45) என்பவரை கடித்து குதறியதோடு தொடையின் பின்பக்கம் பன்றியின் கொம்பு குத்தியது பலத்த காயம் ஏற்பட்டது ரத்தம் நிற்கவில்லை என்று கூறப்படுகிறது இதனை தொடர்ந்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
அதேபோல் நேற்று மாலை உத்தமர்சீலியை சேர்ந்த கணபதி (70) இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட விவசாய அணி நிர்வாகி இவர் நேற்று தனது வாழைத்தோட்டத்திற்கு சென்ற பொழுது அங்கு வந்த காட்டு பன்றி கணபதியை பல இடங்களில் கண்டித்து துன்புறுத்தியது. இதில் கணபதி பலத்த காயமடைந்தார்.
இச்சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் அப்பகுதி மக்கள் ஓடிச் சென்று கணபதியை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதற்கட்ட சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு கணபதி அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் இச்சம்பவம் பற்றி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததும் வனத்துறையினர் நேற்றே வந்துமருத்துவமனையை சிகிச்சை பெற்று வருபவர்களையும் பன்றி தாக்கிய பகுதியையும் பார்த்துள்ளனர்.
இரண்டாவது நாளாக இன்றும் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு காட்டு பன்றியை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு தயாராகி வருகின்றனர்.
இதற்கு இடையில் இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் நம்பர் ஒன் டோல்கேட் போலீசாரும் காயமடைந்த கணபதி மற்றும் சகாதேவனை நேரில் சந்தித்து புகார் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் நாளை திருச்சி கலெக்டர் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காட்டு பன்றியை ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மனு கொடுத்து முறையிட உள்ளனர்.
ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விவசாயதோட்டத்தை சேதப்படுத்திய காட்டு பன்றியை விரட்ட சென்ற உத்தமர்சீலியை சேர்ந்த விஜயகுமார் என்பவரை கடித்துக் குதறியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments