திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பனமங்கலம் அருகே சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த கார் முன்புறம் சென்ற டாரஸ் லாரி மீது மோதி இருவர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை ராயபுரத்தில் இருந்து திருநாமப்பெருமாள்(52), இவருடைய மனைவி விஜயலட்சுமி(45) மகன் விக்னேஷ்(21) ஆகியோருடன் டிரைவர் சிவா(30) நாகர்கோவில் நோக்கி காரை இயக்கி வந்துள்ளார். இந்நிலையில் திருச்சி பழூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிவகங்கைய சேர்ந்த லாரி டிரைவர் செல்லத்துரை(35) டாரஸ் லாரியை இயக்கி வந்த போது கார் லாரி மீது மோதியுள்ளது. இதில் காரை இயக்கி வந்த டிரைவர் சிவா மற்றும் விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் காரில் பயணம் செய்த திருநாமப்பெருமாள் மற்றும் மகன் விக்னேஷ் படுகாயமடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இருவரின் உடல்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments