Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

வெளிநாடுகளில் பணியாற்ற நர்சிங் முடித்த மாணவிகளுக்கு இரண்டு மாத இலவச பயிற்சி

தமிழ்நாடு “ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் “(தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இடத்தைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையில் பயிற்சி திட்டங்கள் வழங்கி வருகிறது.

அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவும் உள்ளது.இதற்கான தகுதிகள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.இப்பயிற்சிக்கு( பி. எஸ்.சி/ எம்.எஸ்.சி )நர்சிங் படிப்பு போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி நர்சிங் மற்றும் பொது செவிலியர் மருத்துவ படிப்பு ஆகிய படிப்புகள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சியில் பங்கு பெற 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்

பயிற்சிக்கான கால அளவு இரண்டு மாதம். விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவின தொகையை தாட்கோவால் அளிக்கப்படும்.இப்பயிற்சி முடிந்தவுடன் தகுதியானவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக அயல்நாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படும் தரப்படும். இப்பயிற்சியில் சேர்ப்பதற்கு தாட்கோ இணையதளம்  www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம் தாட்கோ ராஜா காலனி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை திருச்சிராப்பள்ளி (620001) 0431 -2463969 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் திரு மா பிரதீப் குமார் இ ஆ ப அவர்கள் தெரிவித்துள்ளார்.

 திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய 

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *